தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா பாதிப்பு இருக்கும் வரை ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும்' - ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 15 ஆயிரம்

சென்னை: கரோனோ பாதிப்பு இருக்கும் வரை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

offer-15-thousand-for-ration-card-until-clear-corona-virus-petition-filed
offer-15-thousand-for-ration-card-until-clear-corona-virus-petition-filed

By

Published : Mar 20, 2020, 7:56 PM IST

Updated : Mar 20, 2020, 9:09 PM IST

கரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனோ பாதிப்பைக் குறைக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வருகின்ற 22ஆம் தேதி வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இதேபோல் அலுவலகப் பணியாளர்களை வீடுகளிலேயே இருந்து வேலை செய்ய மாநில அரசு அறிவித்துள்ளது. மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதால் ஒவ்வொரு குடும்பங்களுக்கு வருமான இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் கரானோ பாதிப்பிலிருந்து மாநிலத்தை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் 20 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் கரோனோ பாதிப்பு இருக்கும் வரை தமிழ்நாடு அரசும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், கரோனோ வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை நேரடியாக வீடுகளுக்குக் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு

Last Updated : Mar 20, 2020, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details