பாலசோர்:கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவு ஓடிசா மாநிலம் பாலசோரில் ஏற்ப்பட்ட பயங்கர ரயில் விபத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர்.288 பேர் உயிரிழந்தனர். ரயில் விபத்தில் பலியானவர்களின் உயிரிழந்த உடல்கள் பாலசோரில் உள்ள பஹானாகா உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அக்கட்டிடம் இடிக்கப்படலாம் என பாலசோர் ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே வியாழக்கிழமை பள்ளி நிர்வாகத்துடனும் உள்ளூர் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி கூறினார்.பயங்கர ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டிடத்தை சவக்கிடங்காகப் பயன்படுத்தியதால் மக்கள் மிகுந்த பயத்துடன் இருப்பதால் அதை இடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாலசூரில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் சரக்கு ஏற்றி நின்று கொண்டிருந்த ரயில், இந்த மூன்று ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது உயிரிழந்தோரின் சடலங்கள் நிகழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
அருகிலிருந்த பள்ளி கட்டடம் ஒன்றில் 288 பேரின் சடலங்களும் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன. உயிரிழந்தோரின் உறவினர்கள் அடையாளம் கண்டு உடல்களை பெற்றுச்செல்லும் வரை உடல்கள் தற்காலிகமாக பாதுகாக்கப்படும் பிணவறையாக மாறியிருந்தது பள்ளி. இந்நிலையில் பள்ளியை மையமாக வைத்து கட்டுக்கதைகள் உருவாகின. பாலாசோர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். 45 நிமிட ஆய்வுக்குப் பின் ஆட்சியர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.