தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்.30 ஆளுநர், துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்! - சென்னை அண்மைச் செய்திகள்

வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி ஆளுநர், துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்.30 ஆளுநர், துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அக்.30 ஆளுநர், துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்!

By

Published : Oct 27, 2021, 9:34 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் உயர்கல்வி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, கால்நடை, வேளாண், சட்டத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து ஆலோசனை செய்கிறார்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழ துணைவேந்தர்களுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், கல்வித்தரம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், பேராசிரியர் நியமனம், பாடத்திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும் அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் குறித்தும் ஆளுநர் கருத்துகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:’அலுவல் ரீதியான கடிதத்தை சர்ச்சை ஆக்குதல் சரி அல்ல...’ - தலைமைச் செயலர் இறையன்பு

ABOUT THE AUTHOR

...view details