தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கடற்கரையை ஆக்கிரமித்த 11 கடைகளுக்கு சீல் - occupying shops Seal in Chennai

சென்னை ஒண்டிக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

கடற்கரையை ஆக்கிரமித்து கடைகள்
கடற்கரையை ஆக்கிரமித்து கடைகள்

By

Published : Oct 29, 2021, 8:23 PM IST

சென்னை: ஒண்டிக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஆக்கிரமித்து மரக்கடை உள்ளிட்ட 11 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இப்பகுதிக்கு வருகை தந்த திருவொற்றியூர் மண்டல அலுவலர் பால் தங்கதுரை தலைமையில் உதவிப் பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்த கடைகளுக்கு இன்று (அக்.29) சீல் வைத்தனர்.

கடற்கரையை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு திடீரென்றுசீல் வைத்ததால் கடை உரிமையாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் அலுவலர்களை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க:கீழடி அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details