சென்னை: உயர் நீதிமன்றத்தில் சிங்காரவேலு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நந்தம்பாக்கத்தில் உள்ள துளசிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தை 1987இல் அரசு புறம்போக்கு நிலமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இந்த அரசாணையை ரத்துசெய்து அப்பகுதியில் சாலை அமைத்து, பொது கழிப்பறை உள்ளிட்டவற்றை கட்ட வேண்டும். இந்த நிலத்தை மாநகராட்சி நிலம் என அறிவிக்க வேண்டும்.
ராணுவப் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்களும், ராணுவ எஸ்டேட் அலுவலரும் 2017இல் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி சுற்றுச்சுவர் எழுப்பியதால் பிரதான சாலையை அணுகுவது சிரமமாக இருக்கிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "குறிப்பிட்ட நிலம், ராணுவ நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலம்தான் எனத் தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் உறுதிப்படுத்துவதால், அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப ராணுவத்துக்கு உரிமை உள்ளது. ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதி எனக் கூறுவதால், அரசின் திட்டங்களின்படி மாற்று இடங்களைக் கண்டறிந்து இடம் கொடுக்கலாம்.