தமிழ்நாடு

tamil nadu

விரிவுரையாளர் தேர்வு உத்தேச விடைகள்: ஜன. 10-க்குள் மாற்றுக் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்விற்கான உத்தேச விடைகளின் மீது 10ஆம் தேதிக்குள் மற்றுக் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

By

Published : Jan 7, 2022, 7:42 PM IST

Published : Jan 7, 2022, 7:42 PM IST

அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர்தேர்வு உத்தேசவிடைகள் மீது 10 ந் தேதி வரை மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கலாம்
அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர்தேர்வு உத்தேசவிடைகள் மீது 10 ந் தேதி வரை மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கலாம்

சென்னை:இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனமத்திற்கான போட்டித்தேர்வுகள் ஆன்லைன் மூலம் டிசம்பர் 8ஆம் தேதிமுதல் 13ஆம் தேதி காலை, மாலை இருவேளைகளிலும் நடைபெற்றன.

இந்தத் தேர்வுகளுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்தப் பிரிவில் (Session) தேர்வு எழுதினார்களோ அதற்குரிய மாதிரி வினாத்தாள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக விடைக்குறிப்பிற்கு எதிர்ப்பு (objection) தெரிவிக்கும்போது அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்.

10ஆம் தேதிக்குள் மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கலாம்

சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளத் தற்காலிக உத்தேச விடைக் குறிப்பின் மீது தேர்வர்கள் மாற்றுக் கருத்துகளை 10ஆம் தேதி மதியம் 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆதாரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.

கையேடுகள், தாெலைத்தூரக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது பிற வழிகளில் முறையீடுகள் செய்யப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு 40,288 மாணவர்கள் விண்ணப்பம்

ABOUT THE AUTHOR

...view details