சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண், கால்நடை மற்றும் மீன்வளம், பால்வளத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், ராம.கரு. மாணிக்கம், ஆர்.எஸ் மங்கலம் ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழ்நாடு முழுவதும் கருவேல மரங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. இந்த மரங்கள் மூலம் அதிகம் நீர் உறிஞ்சப்படுவதால், விவசாயிகளின் விளைநிலங்களில் முள்கள் பரவி விடுகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியாத சூழல் ஏற்படுகிறது.
சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆர்.எஸ் மங்களத்தில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய கருவேலமரங்களை அரகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும்" என்றார்.
இதனையும் படிங்க: அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரைமுருகன்