தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ் மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தவர் அழகு முத்துக்கோன்'- ஓ.பன்னீர் செல்வம் - அழகு முத்துக்கோன் நினைவு தினம்

சென்னை: தமிழ் மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்த அழகு முத்துக்கோனின் நினைவைப் போற்றுவோம் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்தார்.

o pannirselvam tweet  துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்  அழகு முத்துக்கோன்  அழகு முத்துக்கோன் நினைவு தினம்  alagumuthu kone
தமிழ் மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தவர் அழகு முத்துக்கோன்'-ஓ. பன்னீர் செல்வம்

By

Published : Jul 11, 2020, 8:31 AM IST

மாவீரன் அழகு முத்துக்கோன் நினைவு தினம் இன்று (ஜூலை 11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, 'ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து தாய் மண்ணைக் காக்கப் போராடிய விடுதலை வீரர்களில் மாவீரர் அழகு முத்துக்கோனின் பங்கு அளப்பரியது.

ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்

நெல்லைச் சீமை பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை எதிர்த்துப் போராடியவர், மாவீரர் அழகு முத்துக்கோன். ஆங்கிலேயரின் தாக்குதலில் பீரங்கியால் பிளக்கப்பட்டு உயிர் பிரியும் தருவாயிலும் கூட, தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று அஞ்சாமல் கூறிய நெஞ்சுரம் மிக்கவர், மாவீரர் அழகு முத்துக்கோன்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர் அழகு முத்துக்கோன், அவர்களின் நினைவு நாளான ஜூலை 11ல் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'விவசாயத்தை பாதிக்கும் கழிவுநீர் தொட்டிகளை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்' - வைகோ

ABOUT THE AUTHOR

...view details