தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் பங்கேற்பது? - ஓபிஎஸ் பதில் - tamilnadu politics 2023

தேர்தல் ஆணைய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என்பது குறித்து முறைப்படி அறிவிப்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் பங்கேற்பது? - ஓபிஎஸ் பதில்
தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் பங்கேற்பது? - ஓபிஎஸ் பதில்

By

Published : Jan 10, 2023, 12:48 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் நிகழ்வு, இன்று (ஜன.10) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் சட்ட விதிப்படி கடிதம் எழுதி கொடுத்துள்ளோம்.

வரும் ஜனவரி 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் அதிமுக சார்பாக யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முறைப்படி அறிவிப்போம். பேரவைத்தலைவர் அப்பாவுவை நானும் சந்தித்தேன். எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் பேரவை தலைவர்தான் உரிய முடிவை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details