தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாகித்ய அகாதமி விருது பெறுபவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து - o panneerselvam wishes Sahitya Akademi Award winners

சாகித்ய அகாதமி விருது பெறுபவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து
ஓபிஎஸ் வாழ்த்து

By

Published : Sep 19, 2021, 4:06 PM IST

சென்னை: சாகித்ய அகாதமி விருது பெறவுள்ளவர்களை வாழ்த்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப்.19) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி" என்று புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலில் குறிப்பிட்டிருப்பதை வைத்தே உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்ச் சொல்லுக்குத் தனி ஓசையுண்டு, இசையுண்டு, அதில் தனிச் சுவையுண்டு, எண்ணமெல்லாம் ஈர்க்கும் திறனுண்டு. இன்னும் எத்தனையோ சிறப்புகளுண்டு. அதனால் தான், பன்மொழிப் புலவர் பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார்.

மூவருக்கும் வாழ்த்து

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்பும் வகையில், உலகப் பொது மறையாம் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்தமைக்காக டி.இ.எஸ். ராகவன், ரவீந்திரநாத் தாகூரின் 'கோரா' என்கிற வங்காள மொழி நாவலை தமிழில் மொழி
பெயர்த்தமைக்காக முனைவர் கே. செல்லப்பன், கவிஞர் சல்மா எழுதிய 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்கிற தமிழ் நாவலை மராத்திய மொழியில் மொழி பெயர்த்த சோனாலி நாவங்குள் ஆகியோருக்கு சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்கள் மூவருக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாடல்கள் மூலம் தேசப்பற்றினை பரப்பிய தாக்கூரி..

ABOUT THE AUTHOR

...view details