தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவின் சாதனையை திமுக பறைசாற்றிக்கொள்வது கேலிக்கூத்து!' - மருத்துவக் கல்லூரி தொடக்கம்

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதை, திமுக சாதனையாகப் பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

O Panneerselvam tweet  ops tweet on medical college  ops tweet on medical college inauguration  ops tweet on eleven medical college inauguration  ops criticize dmk  ஓபிஎஸ் ட்வீட்  மருத்துவக் கல்லூரி தொடக்கம் குறித்து ஓபிஎஸ் ட்வீட்  திமுகவை விமர்சித்த ஓபிஎஸ்  மருத்துவக் கல்லூரி தொடக்கம்  திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்
ஓபிஎஸ்

By

Published : Jan 14, 2022, 2:41 PM IST

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கியது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கிய அதிமுகவின் சாதனையை தனது சாதனையாக திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்து. 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' திமுக என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் அதிமுக என்கிற பொதுநலம் வீறுகொண்டு எழும்” எனkd குறிப்பிட்டிருந்தார்.

ஓபிஎஸ் ட்வீட்

இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு திட்டமிடுதலும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டுக்கு திமுக ஆட்சி.

மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி மத்திய அரசுடன் திமுக நெருக்கமாக, செல்வாக்காக இருந்த இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி மாவட்டங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகள்தான் திறக்கப்பட்டன.

திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்

திமுக தலைவர் நினைத்திருந்தால் அப்போதே அனைத்து மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றிருக்கலாம்; ஆனால் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதற்கான பெருமையை திமுக பறைசாற்றிக் கொள்வதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் பாதிக்காத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் என்று சாதனையை அதிமுக செய்திருக்கிறது என்றால், பாராட்ட மனம் இல்லாமல் கருணாநிதியின் கனவு நிறைவேறியிருக்கிறது என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் கனவு, அதிமுக கழகத்தின் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றைக்கு மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதிமுகதான்.

திமுகவை விமர்சித்த ஓபிஎஸ்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் ஒருபடி மேலே போய் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு 2011ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே அரசு ஆணை திமுக ஆட்சியில் இருக்கும்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு தாங்கள்தான் கொண்டுவந்தார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அதிமுகவால்தான் இது தாமதமானது.

அதுமட்டுமின்றி அதிமுகவால்தான் மருத்துவக்கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டிக் கொள்வது நியாயமில்லை என்று கூறியிருக்கிறார். ஆட்சியைவிட்டுப் போகும் தருவாயில் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு அரசாணை வெளியிட்டுவிட்டு, அதை ஒரு சாதனை என்று கூறுவது வெட்கக் கேடானது, நியாயமற்றது.

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது பொதுநல கோரிக்கையான மாநில சுயாட்சி குறித்தோ, கல்வியை மாநிலப் பட்டியலில் எடுத்துவருவது குறித்தோ, தமிழ்நாட்டிற்கான மத்திய வரி பகிர்வு குறைந்துகொண்டே வருவது குறித்தோ, மேல் வரி குறித்த மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி குறித்தோ, வாய் திறக்காமல் அமைதியாக இருந்துவிட்டு சாதனை படைத்திட்ட அதிமுகவை குறை கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப திமுக என்கின்ற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் அதிமுக என்ற பொதுநலம் வீறுகொண்டு எழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் காட்சிகள் மாறுகின்றன- சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details