சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான வேலைகளை, பாஜகவில் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் சந்திப்பில், அதிமுக இணைப்பு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ் உடனான இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆழமாக சிந்தித்து முடிவு எடுங்கள் என ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவை ஒன்றிணைக்க ஒருவேளை இபிஎஸ் சம்மதம் தெரிவித்தால், வரும் ஜனவரி 17-ம் தேதி இணைப்பிற்கான நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது ஒருபுறம் இருக்க, இபிஎஸ் உடனான பதவி மோதல் காரணமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பக்கம் ஓபிஎஸ் திரும்பினார். பலமுறை "நேரம் வரும் போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நேரடியாக சந்திப்பேன்" என ஓபிஎஸ் கூறியிருந்தார். பல மாதங்களாக இந்த சந்திப்பு தாமதமான நிலையில், அது தற்போது சாத்தியமாக கூடிய சூழல் வந்துள்ளதாக கருதப்படுகிறது.
நேற்று(நவ.25) சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனையில் ஈடுபட்டார். ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலாவிடம் சில நிர்வாகிகள், "ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் மெரினாவில் நடைபெறும் அமைதி பேரணியில் ஓபிஎஸையும் சந்திக்கலாம்.