சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் அம்மா உணவகத்தை சூறையாடியுள்ளனர். மேலும், உணகவகத்திலுள்ள காய்கறிகள், பாத்திரங்களை சேதப்படுத்தி, அங்கிருந்த அம்மா பெயர் பலகைகளை உடைத்தனர்.
இந்த காணொலி சமூக வலைதளைங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அமையப்போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே, திமுகவினர் வன்முறையும், அரசியல் அநாகரீகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.