சென்னை: தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று அதிகாலை காலமானார். இதனை தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர்
அதில், "என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாரும், மூத்த அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவருமான குமரி அனந்தன் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மன வேதனையும் அடைந்தேன்.