சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 25ஆம் தேதி காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் டெல்லி சென்றனர்.
அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினர். அப்போது அதிமுக விவகாரங்கள், தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.