தமிழ்நாடு

tamil nadu

ரவுடியை பிடிக்க முன்றபோது காவலர் படுகொலை - துணை முதலமைச்சர் இரங்கல்

By

Published : Aug 19, 2020, 12:26 AM IST

சென்னை: ரவுடியை பிடிக்க முயன்றபோது உயிரிழந்த காவலருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார்.

ops
ops

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கறை பகுதியில் இரட்டைகொலை வழக்கில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ஏற்பட்ட தாக்குதலில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுப்பிரமணியன் மரணத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் இரங்கல்

அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டை கொலை வழக்கு குற்றவாளியை காவலர்கள் கைது செய்ய விரைந்த போது குற்றவாளி நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முறப்பநாடு அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details