தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெரியாரை முழுமையாகத் தெரிந்துகொண்டு பேசவேண்டும்' : ரஜினியை சாடிய ஓபிஎஸ்

சென்னை: பெரியாரை குறை சொல்பவர்கள் மீண்டும் ஆரம்பக் கட்டத்திலிருந்து, பெரியார் குறித்து தீவிரமாகப் படித்து ஆராய்ந்து கருத்துகளை சொல்லவேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

By

Published : Jan 22, 2020, 8:14 AM IST

periyar
periyar

சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 25 ஆண்டுகளாக பதிப்புத் துறையில் சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய அவர்,

"தந்தை பெரியார் அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள், கீழ்த்தட்டு மக்கள் போன்றவர்களுக்காக தமிழ்நாட்டில் வலம் வந்ததன் காரணமாகத் தான், இன்று என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள்கூட மிக உயர்ந்த உன்னத இடத்திற்கு வர முடிந்துள்ளது.

அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது பல விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாகப்போயின. தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்படவேண்டியவை. அதை யாராலும் மறுக்க முடியாது.

இதை குறை சொல்பவர்கள், மீண்டும் ஆரம்பக் கட்டத்திலிருந்து, பெரியார் இந்த சமுதாயத்தை உயர்த்த எடுத்த முன்முயற்சிகளை தீவிரமாகப் படித்து ஆராய்ந்து கருத்துகளை சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க மறுத்துள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினியை சாடும்விதமாக இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details