தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது! - Nurses protest

மருத்துவ தேர்வு வாரியத்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்யப் போராடிய 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது
பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது

By

Published : Jun 7, 2022, 5:04 PM IST

சென்னை:மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015ஆம் ஆண்டில் இருந்து 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல காலமாக செவிலியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கலைஞர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து, செவிலியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல் துறையினர்

காவல் துறை அலுவலர்கள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரோ அல்லது செயலாளரோ எங்களுக்கு உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தின் போது கல்வீசி தாக்கப்பட்ட காவல் துறை அலுவலர்

போராட்டம் நடைபெற்றுக்கொண்டிடுக்கும்போது பெண் காவல்துறை அலுவலர் ஒருவர் கல்வீசி தாக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கைது செய்யும்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் பணியாளர்களுக்கு 'சம்பளம் பிடித்தம்' - அரசு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details