சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான நிலப்பரப்புகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் ஏராளமான தண்ணீர் தேங்கி நிற்கிறது.
முக்கியமாக மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக தண்ணீருடன் கலந்து வீட்டினுள் பாம்பு, புழு, பூச்சிகள் உள்ளிட்டவை வந்து சேரும் ஆபத்துகள் உள்ளன. இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, சாரைப்பாம்பு, நல்லப்பாம்பு ஆகிய பாம்புகளை வனத்துறையினர் அனாயசமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் மழைக் காலங்களில் இது போன்ற விஷ பூச்சிகளோ, பாம்புகளோ குடியிருப்பு பகுதியில் நுழைந்தால் அது குறித்து உடனடியாக வேளச்சேரியில் உள்ள வனத்துறையின் தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு 044 222 00 335 அழைத்தால் உடனடியாக வனத்துறையினர் அங்கு வருவார்கள் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ரேஷன் கார்டுக்கு ரூ.1000 மழை நிவாரணம்; சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவுக்கு முதல்வர் அறிவிப்பு!