தமிழ்நாட்டிலிருந்து திருவனந்தபுரம், டெல்லி ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பிய ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி - 7 பேருக்கு கரோனா
11:07 March 31
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள, திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது மதிக்கத்தக்க நபர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா: சுமார் 4 லட்சம் பேரிடம் கணக்கெடுப்பு