சென்னை கோடம்பாக்கம், அண்ணாநகர் மண்டல பகுதிகளில் செயல்படும் மருத்துவ முகாம்களை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதையடுத்து அவர் பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் மற்றும் கரோனா விழிப்புணர்வு கையேடு ஆகியவற்றை வழங்கினார்.
அவருடன் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சத்யா, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் எஸ். வினீத், கோபால சுந்தர ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ் முத்துசுவாமி, ஐபிஎஸ் அலுவலர்கள் கே.மீனா, சி. கலைசெல்வன், எஸ். சாந்தி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரத்து 712 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 8 லட்சத்து 20ஆயிரத்து 358 பேர் பயனடைந்துள்ளனர்.