தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் உயரும் அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை! - புதிதாக இரண்டு பல்கலைகழகங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு அரசு பல்கலைகழகங்கள் அமையவிருப்பதையடுத்து அரசு பல்கலைகழகங்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஒரு புதிய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்றும், அதே போன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலை கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 13லிருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. புதியதாக அமைய உள்ள பல்கலைகழகத்தின் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு இந்தாண்டே பல்கலைகழகங்கள் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிகிறது.