பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ”தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 583 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 592 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை நான்கு கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 793 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 26 லட்சத்து 22 ஆயிரத்து 678 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள்,தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 282 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 607 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 76 ஆயிரத்து 378 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் ஏழு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகளும் என 18 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 18 என உயர்ந்துள்ளது.
மேலும் கோயம்புத்தூரில் புதிதாக 729 நபர்களுக்கும், சென்னையில் 165 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 127 நபர்களுக்கும், ஈரோட்டில் 104 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை மாவட்டம் 54498
- கோயம்புத்தூர் மாவட்டம் 237203
- செங்கல்பட்டு மாவட்டம் 165904
- திருவள்ளூர் மாவட்டம் 116169
- சேலம் மாவட்டம் 96423
- திருப்பூர் மாவட்டம் 90741
- ஈரோடு மாவட்டம் 98995
- மதுரை மாவட்டம் 74069
- காஞ்சிபுரம் மாவட்டம் 73021
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் 74657
- தஞ்சாவூர் மாவட்டம் 71290
- கன்னியாகுமரி மாவட்டம் 61099
- கடலூர் மாவட்டம் 62520
- தூத்துக்குடி மாவட்டம் 55542
- திருநெல்வேலி மாவட்டம் 48505
- திருவண்ணாமலை மாவட்டம் 53531
- வேலூர் மாவட்டம் 48928
- விருதுநகர் மாவட்டம் 45788
- தேனி மாவட்டம் 43237
- விழுப்புரம் மாவட்டம் 44937
- நாமக்கல் மாவட்டம் 49150
- ராணிப்பேட்டை மாவட்டம் 42632
- கிருஷ்ணகிரி மாவட்டம் 42166
- திருவாரூர் மாவட்டம் 39202
- திண்டுக்கல் மாவட்டம் 32524
- புதுக்கோட்டை மாவட்டம் 29218
- திருப்பத்தூர் மாவட்டம் 28634
- தென்காசி மாவட்டம் 27129
- நீலகிரி மாவட்டம் 31891
- கள்ளக்குறிச்சி மாவட்டம் 30212
- தருமபுரி மாவட்டம் 26964
- கரூர் மாவட்டம் 23176
- மயிலாடுதுறை மாவட்டம் 22087
- ராமநாதபுரம் மாவட்டம் 20212
- நாகப்பட்டினம் மாவட்டம் 19796
- சிவகங்கை மாவட்டம் 19454
- அரியலூர் மாவட்டம் 16414
- பெரம்பலூர் மாவட்டம் 11742
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1023
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1082
- ரயில் மூலம் வந்தவர்கள் 428” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் நிபா: 2 பேருக்கு அறிகுறி