தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், திருவிக, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
கரோனா பாதிப்பு: 8 ஆயிரத்தை தாண்டிய ராயபுரம் - சென்னை மாநகராட்சி ஆணையம்
சென்னை: ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவித்தது.
இதனையடுத்து ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை ராயபுரத்தில் 8 ஆயிரத்து 89 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 5 ஆயிரத்து 639 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் குணமடைந்தோர் 70 விழுக்காட்டினர் உள்ளனர். இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது,
அதன்படி,
ராயபுரம் - 8 ஆயிரத்து 89 நபர்கள்
தண்டையார்பேட்டை - 6 ஆயிரத்து 637 நபர்கள்
தேனாம்பேட்டை - 6 ஆயிரத்து 547 நபர்கள்
கோடம்பாக்கம் - 6 ஆயிரத்து 173 நபர்கள்
அண்ணா நகர் - 6 ஆயிரத்து 355 நபர்கள்
திருவிக நகர் - 4 ஆயிரத்து 833 நபர்கள்
அடையாறு - 3 ஆயிரத்து 622 நபர்கள்
வளசரவாக்கம் - 2 ஆயிரத்து 460 நபர்கள்
அம்பத்தூர் - 2 ஆயிரத்து 724 நபர்கள்
திருவொற்றியூர் - 2 ஆயிரத்து 276 நபர்கள்
மாதவரம் - 1, 872 நபர்கள்
ஆலந்தூர் - 1, 497 நபர்கள்
பெருங்குடி - 1, 456 நபர்கள்
சோளிங்கநல்லூர் - 1, 593நபர்கள்
மணலி - 991 நபர்கள்
என மொத்தம் 15 மண்டலங்களில் 58 ஆயிரத்து 327 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்