சென்னை:கரோனாவின் தாக்கம் குறையாமல் மொத்தம் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை சென்னையில் 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
பரவலை குறைப்பதற்கு, அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள், மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இரண்டு மண்டலங்களுக்கு அடுத்து ராயபுரம் தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோரின் விழுக்காடு 92ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று வருபவர்களில் விழுக்காடு 6 ஆக உள்ளது. இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 926 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 798 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 10, 000 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 128 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.
மண்டல வாரியான பாதிக்கப்பட்டவரின் பட்டியல்,
கோடம்பாக்கம் - 18116
அண்ணா நகர் - 18050
ராயபுரம் - 15387
தேனாம்பேட்டை - 15365
தண்டையார்பேட்டை - 13177
திரு.வி.க. நகர் - 12329
அடையாறு - 12464
வளசரவாக்கம் - 10461
அம்பத்தூர் - 11358
திருவொற்றியூர் - 4971
மாதவரம் - 5735
ஆலந்தூர் - 6419
சோழிங்கநல்லூர் - 4554
பெருங்குடி - 5616
மணலி -2486