தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 10:49 PM IST

ETV Bharat / state

சென்னையில் மட்டும் 764 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை : கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கு வகையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 764ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
சென்னை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், கரோனாவின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதில் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் தெருக்களைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து, தடுப்புகள் அமைத்து அப்பகுதிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் ராயபுரம் - 134 பகுதிகள்,

திரு.வி.க. நகர் - 127 பகுதிகள்,

வளசரவாக்கம் - 32 பகுதிகள்,

தண்டையார்பேட்டை - 30 பகுதிகள்,

தேனாம்பேட்டை - 80 பகுதிகள்,

அம்பத்தூர் - 72 பகுதிகள்,

கோடம்பாக்கம் - 52 பகுதிகள்,

திருவொற்றியூர் - 39 பகுதிகள்,

அடையாறு - 17 பகுதிகள்,

அண்ணா நகர் - 25 பகுதிகள்,

மாதவரம் - 64 பகுதிகள்,

மணலி - 48 பகுதிகள்,

சோழிங்கநல்லூர் - 16 பகுதிகள், பெருங்குடி - 15 பகுதிகள், ஆலந்தூர் - 13 பகுதிகள் என மொத்தம் 764 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், தொடர்ந்து 28 நாட்களுக்கு கரோனா தொற்று இல்லை என்றால், அவை தளர்வுப் பகுதிகளாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் எட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், தளர்வுப் பகுதிகளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் இன்று மேலும் 536 பேருக்கு கரோனா; முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details