தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்தனர். பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டனர் என்றும் அவர்களின் இறப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸின் இறப்புக்கு நீதி வேண்டும்(#JusticeForJeyarajAndFenix) என்ற ஹேஷ்டாக்கின் கீழ் பல்வேறு தரப்பினரும் தங்கள் குரலை எழுப்பி வந்தனர். இந்நிலையில், இந்த ஹேஷ்டாக்கின் கீழ் சுசித்ரா, ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ், சாந்தனு உள்ளிட்ட தமிழ்த் திரைப் பிரபலஙகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்தனர்.