தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவைத் தேடும் #ENPT படத் தயாரிப்பு நிறுவனம் - #ENPT Production Company seeking support to there fans

சென்னை: ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளிவர ரசிகர்களின் அன்பும் ஆதரவும் வேண்டும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

#ENPT Production Company seeking support to there fans

By

Published : Sep 6, 2019, 8:03 PM IST

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளிவர காலதாமதமானதையொட்டி அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவிருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. இதற்காக செய்த பல முயற்சிகளும் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தன.

இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகளை நாங்கள் கவனித்துக்கொண்டுள்ளோம். எங்கள் இலக்கை அடைய ரசிகர்களின் அன்பும் ஆதரவும் வேண்டும்.

இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும்போது, உங்களது காத்திருப்பை பூர்த்திசெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details