தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய அளவில் ட்ரெண்டான #ChiefMinisterMKStalin ஹேஷ்டேக் - TN CM mk stalin

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து, இந்திய அளவில் #ChiefMinisterMKStalin ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது

mk stalin
மு.க ஸ்டாலின்

By

Published : May 7, 2021, 11:03 AM IST

Updated : May 7, 2021, 12:44 PM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைத்தார். தொடர்ந்து, அவரது ட்விட்டர் பக்க சுய விவரமும் தமிழ்நாடு முதலமைச்சர் என மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்திய அளவில் #ChiefMinisterMKStalin ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. பலரும், மு.க ஸ்டாலினுக்கு அந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளதை கட்சி தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அதே போல, #முகஸ்டாலின்எனும்நான்” என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 7, 2021, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details