சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல் துறை அலுவலர்களின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 5 நாள்கள் பணி நடைபெற்றுக்கொண்டு வந்த நிலையில் நேற்று (மே 8) கண்ணையன் என்ற முதியவர் தீக்குளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று (மே 9) உயிரிழந்தார். இவரின் இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்வு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து உயிரிழந்த கண்ணையன் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இவ்வளவு காலமாக எல்லா உரிமைகளையும் இந்த பகுதிமக்களுக்கு கொடுத்துவிட்டு தற்போது எப்படி மக்கள் இருக்கும் இடத்தை இடிப்பார்கள்.