தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை விஜயலட்சுமி விவகாரம்.. நாம் தமிழர் சீமானுக்கு சம்மன்! உடனடியாக ஆஜராக அழைப்பாணை! - valasaravakkam police station

summon for Seeman: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சம்மன்
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சம்மன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 10:20 AM IST

சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், புகார்கள் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்து வருகிறார். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சீமான் நடிகை விஜயலட்சுமி இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக கூறி இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி கடிதம் எழுதி கொடுத்ததால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை விஜயலட்சுமி மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் தன்னை நம்ப வைத்து மீண்டும் ஏமாற்றி விட்டதாக கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட பழைய வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் எனவும், மீண்டும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை கோயம்பேடு துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடிகை விஜயலட்சுமி இடம் விசாரணை மேற்கொண்டு அவர் தரப்பில் இருந்து விவரங்கள் மற்றும் ஆதாரங்கள் கேட்டு பெற்றனர். அதன் பிறகு விஜயலட்சுமியை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலங்களையும் பெற்றனர்.

இதையும் படிங்க:சனாதனம் குறித்து முதலமைச்சர் பொது மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா? - கிருஷ்ணசாமி கேள்வி

அப்போது நடிகை விஜயலட்சுமி தான் ஏழு முறை சீமானின் கட்டாயத்தால் கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். சீமானால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கட்டதாகவும் நடிகை விஜயலட்சுமி குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ள புகாரின் அடிப்படையில், மருத்துவ ரீதியிலான ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியுமா என்ற கோணத்தில் அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து அடுத்த கட்டமாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு மருத்துவ அறிக்கை வந்த பின்பு அடுத்த கட்ட ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதாக கூறி அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று (செப் 9) காலை 10.30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:"அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா?" - தென்காசி ஆய்வில் உறுதிமொழி குழு பகீர் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details