தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம்- சீமான்

சென்னை: மதுபானக் கடைகளைத் திறப்பது கரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது என்று மாநில அரசுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம்- சீமான்
மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம்- சீமான்

By

Published : May 5, 2020, 3:01 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும்.

தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது.

அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே,மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பார்க்க: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details