தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இடைத்தேர்தல் என்றாலே வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதை மரபாக்கிவிட்டார்கள். பணம் கொடுத்தால்தான் வாக்குபெற முடியும். மக்கள் இந்த இரண்டு கட்சிகளின் மீதும் வெறுப்பில் உள்ளார்கள். தேர்தல் நேரத்தில் பணம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால் இது பணநாயகமாக மாறி ஜனநாயகம் இறந்துவிடும்'' என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்கள் பற்றி பேசியது குறித்து கருத்து கூறிய சீமான், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை அநாகரிகமானது. அமைச்சர் என்பவர் சாதி, மதம் கடந்து பொதுவானவராக இருக்க வேண்டும். மாண்பை தவறி ஒரு அமைச்சர் பேசுவது அநாகரிகமானது என்றார்.