சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தை வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். இதனையடுத்து தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து வீடுகளிலும் இணைய வசதி -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சென்னை: மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டின் அனைத்து இல்லங்களிலும் இணையம் வழங்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
rb.udhayakumar
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். இணையம் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளின் இணையதள வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மத்திய அரசின் உதவியோடு விரைவில் அனைத்து இல்லங்களிலும் இணைய திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.