சென்னை:என்எஸ்இ மேலாண் இயக்குநராகவும் , தலைமை நிர்வாக அலுவலராக சித்ரா ராமகிருஷ்ணா 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அந்த சமயத்தில் என்எஸ்இ நிர்வாக அலுவலராகவும், மேலாண் இயக்குனரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தில் முறைகேடுகள் காணப்படுவதாகவும், அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். இதில், தேசிய பங்குச் சந்தையில் பல்வேறு ஊழல் விவகாரங்களிலும்,புகாருக்கும் உட்பட்ட தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன், இந்த வாரத்தில் சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படப்போவதாகத் தகவல்கள் வெளியானது.