தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NPTEL ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்: சென்னை ஐஐடி அறிவிப்பு - NPTEL ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை

சென்னை: ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

IIT Madras
IIT Madras

By

Published : Jun 2, 2020, 5:31 AM IST

இந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அல்லது பிற்காலத்தில் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புபவர்களும் இந்த இணைய வழி படிப்பினைத் தொடரலாம். ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட் ட்ரான்ஸ்பர் செய்யப்படுகிறது.

படிப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், சான்றிதழ் வாங்க நினைக்கும் மானவார்களுக்கு தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான onlinecourses.nptel.ac.in மூலம் பதிவு செய்யலாம்.

“கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின், மாணவர்கள் NPTEL படிப்புகளை தங்களது பிரதான பாடத்திட்டங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கவேண்டிய சூழலில், இது நல்ல வாய்ப்பாக அமைகிறது.

NPTEL படிப்புகள் ஒரு வகுப்பறைச் சூழலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நன்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கருத்துக்கள் ஆழமாக விளக்கப்படுகிறது” என்று சென்னை ஐ.ஐ.டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NPTEL என்பது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். NPTEL சான்றிதழ்கள் MOOC-கள் வடிவத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் வீடியோ மூலம் கற்பிக்கப்படும். மாணவர்கள் வாராந்திர / மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் வாங்க நினைப்பவர்கள் இறுதித் தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு மாணவர் சான்றிதழ் தேர்வை முடித்தவுடன் கிரெட்டி ட்ரான்ஸ்பர் செய்யக் கோரலாம். NPTEL திட்டத்தில் இன்று வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ’டெடியுடன்’ பேருந்தில் பயணித்த இளம்பெண்!

ABOUT THE AUTHOR

...view details