* வகை 2 மற்றும் 3 இல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம்.
* வகை 1 இல் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1இல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும்.
இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெறவுள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) மணமகன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
வகை-1 இல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை -2, 3 இல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெற வேண்டும்.
* திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காகப் பயணிக்கத் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.