தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா எதிரொலி: ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை கோரி வழக்கு - Novel corona virus fever, seeking stay for IPL matches

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Novel corona virus fever, seeking stay for IPL 2020 matches
Novel corona virus fever, seeking stay for IPL 2020 matches

By

Published : Mar 11, 2020, 6:21 PM IST

சீனாவில் 3,000க்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனிடையே இன்னும் சில நாள்களில் 13ஆவது ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கிறது. இத்தொடருக்கு தடைவிதிக்கக் கோரி அலெக்ஸ் பென்சகிர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அம்மனுவில், "மார்ச் 29ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் ஒரே மைதானத்தில் திரள்வார்கள். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால், வைரஸ் வேகமாக பிறருக்குப் பரவத் தொடங்கி விடும்.

எனவே நிகழப்போகும் மிகப்பெரிய ஆபத்தைத் தவிர்க்க, இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் ஏலம்: இந்தாண்டும் கோடிகளில் புரளும் தமிழ்நாடு வீரர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details