தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2022, 3:25 PM IST

ETV Bharat / state

ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிப்பு

நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாடுக்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாடு பொருந்தாது
ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாடு பொருந்தாது

சென்னை:நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்கள் கவனத்திற்கு என்று இந்திய அரசு, ஜல் சக்தி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, மொத்த தண்ணீர் சப்ளை மற்றும் வீட்டிற்கு பயன்படுத்துபவர்கள் என அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களுக்கு உரிய கட்டணமாக 10 ஆயிரம் நிலத்தடி நீர் ஆணையத்திற்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதோடு ஜூன் 30ஆம் தேதிக்குள் செலுத்தி என்ஓசி பெறாமல் நிலத்தடி நீரை தொடர்ந்து எடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, சட்டத்திற்குப் புறம்பாகவும் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கும் பொருந்துமா என்ற கேள்வியும் குழப்பமும் மக்களிடையே ஏற்பட்டது.

இந்நிலையில் தான், ஒன்றிய ஜல் ஜக்தி துறை வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு - அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details