தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 6 வணிக கடைகளிடம் விளக்கம் கேட்டு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Aug 15, 2021, 9:19 PM IST

சென்னை:சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 405 கிலோ அளவுள்ள குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் மீது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 2003ன்படி காவல் துறையினரால் வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் புரிவோர், கட்டாயம் தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

6 வணிக கடைகளுக்கு நோட்டீஸ்

தொழில் உரிமம் பெற்று வியாபாரம் செய்வோர், விதிகளை மீறி உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களை விற்பனை செய்யக் கூடாது.

தற்போது, இதற்கு மாறாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து சிக்கிக்கொண்ட 6 வணிக கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சென்னை மாநகராட்சியால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை எந்த காரணத்துக்காகவும் சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க:நண்பனை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details