தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் மன அழுத்தத்தை போக்க நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தல் - சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு குழந்தைகள் தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு அறிவிப்பு
பள்ளிகளுக்கு அறிவிப்பு

By

Published : Oct 20, 2021, 9:59 PM IST

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது கரோனா தொற்று காலத்திலிருந்து மீண்டு வந்து இருப்பதால் ஒவ்வொரு துறையும் குழந்தைகள் தின விழாவை கொண்டாட வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அதிகபட்சமாக 20 மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளது. அதன்படி பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு குழந்தைகள் தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அறிவிப்பு

அதன்மூலம் குழந்தைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக பதவியேற்றார் 90 வயது மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details