தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் படிப்புகளான பி.இ, பி.டெக், பி.ஆர்க் ஆகிய பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

By

Published : May 4, 2023, 5:59 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழுச் செயலாளர் வெளியிட்டுள்ள தகவலில்,
''முதலாமாண்டு பி.இ, பி.டெக், பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24ஆம் கல்வியாண்டில் சேர்க்கைப் பெற விண்ணப்பிக்கலாம்.

https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் பொறியியல் சேர்க்கைக்கான பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card, Credit Card, Net Banking, UPI இணையதள வசதி மூலமாகவும் செலுத்தலாம்.

இணையதளம் மூலமாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் “The Secretary TNEA” payable at Chennai என்ற பெயரில் மே 5ஆம் தேதியில் இருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் பிரிவினர் 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.சி.ஏ,எஸ்.டி பிரிவினர் 250 ரூபாயும் செலுத்த வேண்டும்.

கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ளலாம். தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் போதே அசல் சான்றிதழ்களை இணையதளம் மூலம் சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதளம் மூலம் சரிபார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணவரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரி செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும்.

B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044 – 2235 1014, 044-2235 1015 அல்லது 1800 – 425 – 0110 என்ற எண்ணிலோ அல்லது Email tneacare@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details