சென்னை:நவம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தலைமைச் செயலக பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், அகவிலைப்படியினை வழங்க வலியுறுத்தியும், கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.
அதாவது ஒன்றிய அரசு அதன் பணியாளர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியினை வழங்காததற்கும், ஈட்டிய விடுப்புக் கணக்கிலுள்ள விடுப்பினை சரண் செய்து ஊதியமாகப் பெறும் நடைமுறையானது, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.