தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித் ஷா - ரஜினி சந்திப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை - கரு. நாகராஜன் - அமித் ஷா - ரஜினி சந்திப்பு பற்றி எதுவும் தெரியாது

சென்னை: தமிழ்நாடு வரும் அமித் ஷா நடிகர் ரஜினியை சந்திப்பது தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்று தமிழ்நாடு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்தார்.

nagarajan
nagarajan

By

Published : Nov 17, 2020, 6:08 PM IST

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 21ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து ஆலோசிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறுகையில், அமித் ஷாவின் வருகை தமிழ்நாட்டில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி தமிழ்நாடு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கட்சி நிர்வாகிகள் இன்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 21ஆம் தேதி சென்னை வருகை தரவுள்ளார். பாஜக இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக அமித் ஷா சென்னை வருகிறார்.

உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளோம். தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள் அணிந்து பாஜக தொண்டர்கள் தமிழர் பாரம்பரிய கலாசார முறைப்படி வரவேற்பளிக்க உள்ளோம்.

அமித் ஷா - ரஜினி சந்திப்பு பற்றி எதுவும் தெரியவில்லை

நடிகர் ரஜினியை அமித் ஷா சந்திப்பது தொடர்பான எந்தத் தகவலும் இல்லை. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அமித் ஷா வழங்குவார் என நம்புகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:”தேச நலனுக்கு எதிரான கூட்டணியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details