சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கடந்த அதிமுக ஆட்சியில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 50 விழுக்காடு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 பெண்கள் பயன் பெற்றிருந்தனர்.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு திமுக ஆட்சியிலும் அந்த திட்டத்தைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.