சென்னை: கடலூர் மாவட்டம், வடலூரில் வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் மற்றும் சில விக்ரகங்களை சபநாதஒளிசிவாச்சாரியார் என்பவர் கடந்த 2006இல் நிறுவினார். ‘பிரதோசம்’ அன்று அதற்கு வழிபாடும் நடத்தப்பட்டது. சிலைவைக்கப்பட்டது வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, இந்து அறநிலையத் துறையிடம் முறையீடு செய்தனர்.
இதுதொடர்பான இந்து சமய அறநிலையத்தறை நடத்திய விசாரணையில், 1872இல் சத்தியஞான சபை நிறுவப்பட்ட பின்னர் வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டு, ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படவில்லை. லிங்க வழிபாடு வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது என்று உத்தரவிட்டு சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இணை ஆணையரின் இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத்துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார். அந்த மனுவை,தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதிசெய்தும், இந்து அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து சபநாதஒளிசிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.