சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதி வாரியாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆனந்தபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டங்கள் நடத்திவருகின்றனர்" எனக் கோரப்பட்டது.