தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேபிடோ செயலிக்கு தடையை நீக்க முடியாது - உயர் நீதிமன்றம்! - Not lift rapido app stay order HC uphold single judge order

சென்னை: தமிழ்நாடு அரசின் விளக்கத்தைக் கேட்காமல் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையை வாடகைக்கு விடும் ரேபிடோ செயலி மீதான தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரேபிடோ செயலி தடை நீக்க முடியாது -உயர்நீதிமன்றம் அதிரடி!

By

Published : Jul 26, 2019, 9:08 PM IST


மோட்டார் வாகன சட்டப்படி சொந்த வாகனத்தை வாடகை சேவைக்காக பயன்படுத்தக்கூடாது, இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த இன்னும் விதிமுறை இயற்றப்படவில்லை. எனவே ரேபிடோ பைக் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்குமாறும், அதன் இணையதளத்தை முடக்குமாறும் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனிடையே மாநகர ஆணையர் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு விதிகளை உருவாக்கும் வரை, ரேபிடோவை அனுமதிக்க முடியாது என கூறி தடையை நீக்க மறுத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து ரேபிடோ நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை வழக்காக ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, இன்று அவரச வழக்காக விசாரித்தனர்.

இந்நிலையில், அரசு தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details