தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 2020-21யில் கலந்துகொண்ட காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூன்று மணி நேரம் அதிமுக அரசு வாசித்த நிதி நிலை அறிக்கையில் எந்த நல்ல அறிவிப்புமில்லை. இது போன்றதொரு மோசமான நிதி நிலை அறிக்கையை பார்த்தது இல்லை. அதில் வேலை வாய்ப்பை பற்றி ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை.
"வேலைவாய்ப்பை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை" - கே.ஆர். ராமசாமி - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பை பற்றி ஒருவார்த்தைகூட அதிமுகவினர் பேசவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்துள்ளார்.
tamilnadu-budget-2020-21
வருவாயை அதிகரிக்க அதிமுக அரசு வழிவகை செய்யவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. ஏற்கனவே உள்ள 250 ஓ.என்.ஜி.சி கிணறுகள் குறித்து எந்த தெளிவும் விளக்கமும் தரவில்லை. கடன் சுமை அதிகரித்திருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட்2020: கல்வித் துறைக்கு ரூ. 34, 841 கோடி ஒதுக்கீடு!