தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர் - இந்தி பிரசார் சபா தகவல்

தமிழ்நாட்டில் இந்திப் படிப்பவர்களும் தமிழ் பாடத்தை படித்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் இருந்து ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்தி மாெழியை கற்று வருகின்றனர் என தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர்
தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர்

By

Published : Oct 18, 2022, 7:37 PM IST

Updated : Oct 18, 2022, 8:30 PM IST

சென்னை:தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கான தென்னிந்திய இந்தி பிரச்சார சபா சென்னை தி.நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இந்தி பாடம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு, ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியை மாணவர்களுக்கு 9 பிரிவுகளாக வழங்கி வருகின்றனர். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ் நாட்டிலிருந்து மாணவர்கள் அதிகளவில் இந்தி கற்றுக் கொள்கின்றனர். இது குறித்து இந்தி பிரச்சார சபாவின் பொதுச் செயலாளர் செல்வராஜ் இடிவி பாரத்திற்குற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தென்மாநிலங்களுடன் தொடர்புகொள்ள இந்தி கற்பிக்க வேண்டும் என்பதற்காக 1918 ம் ஆண்டு தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவை மகாத்மா காந்தி ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து 1922ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு இந்தி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தி பிரச்சார சாபாவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து கல்லூரி படிப்புகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் வட நாட்டிலிருந்தும் மாணவர்கள் வந்து இந்தி பட்டங்களைப் பெறுகின்றனர்.

இந்தி பிரச்சார சபா 2020 ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து 1 லட்சத்து 45 ஆயிரத்து 237 பேரும், கர்நாடகாவில் 6,661 பேரும், கேரளாவில் 9,158 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 3 லட்சத்து 98 ஆயிரத்து 937 பேரும் எழுதினர். 2021 ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து 99 ஆயிரத்து 775 பேரும், கர்நாடகாவில் 2,998 பேரும், கேரளாவில் 5,466 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 3 லட்சத்து 74 ஆயிரத்து 335 பேரும் எழுதினர்.

இந்தி ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் இந்தி படிக்க மாணவர்கள் விரும்பினால் அந்தப் பள்ளிக்கும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு, கற்பித்து வருகிறோம்.

தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர்

இந்தி படிக்கும் மாணவர்கள் அவர்களின் தாய் மொழியிலும் புலமை பெற வேண்டும் என்பதற்காக பிரவேஷிகா, விஷாரத் பூர்வர்த், விஷாரத் உத்தரார்த்த ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தாய் மொழியிலும் ஒரு பாடத்திற்கான தேர்வினை எழுத வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதுபவர்கள் வட இந்தியராக இருந்தாலும், 9 ம் வகுப்பு நிலையில் உள்ள தமிழ் பாட தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தி திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

Last Updated : Oct 18, 2022, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details